×

கொரோனா தொற்றை தடுப்பதில் என்-95 முகக்கவசங்கள் சூப்பர்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி:  நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் நம் மக்கள் ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும் பின்பற்று கின்றனர். உடைக்கு ஏற்றப்படி விதவிதமாக முகக்கவசம் அணிகின்றனர். இதில், வென்டிலேட்டர் வைக்கப்பட்ட முகக்கவசங்களை அணியக் கூடாது என்று சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்தது. நோய் பாதித்தவர்கள் இதை அணிந்தால், அவர்கள் விடும் மூச்சு மற்றும் இருமல் மூலமாக நோய்க்கிருமிகள் வெளியே வந்து, மற்றவர்களுக்கு பரவும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி பத்மநாப பிரசன்ன சிம்ஹா, உள்ளிட்டோர் முகக்கவசத்தை பயன்படுத்துவதின் மூலமாக கொரோனாதொற்று பரவலை கட்டுப்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவானது, ‘இயற்பியல் திரவங்கள்’ என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதில் முகக்கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், என்-95 முகக்கவசம், மிகச்சிறிய திரவ துளிகள் வழியாக கொரோனா பரவுவதை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
* நாடு முழுவதும் புதிதாக 67,151 பேர், கொரோனாவால் புதிதாக பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32,34,474 ஆக அதிகரித்துள்ளது.
* இதுவரை, 24,67,758 பேர் குணமடைந்து உள்ளனர். இதன் மொத்த சதவீதம் 76.30.
* நோய் பாதித்த 7,07,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1059 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த பலி எண்ணிக்கை 59,449 ஆக உயர்ந்தது.
*  நாடு முழுவதும் இதுவரை 3,76,51,512 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona, blocking, N-95 masks super, study information
× RELATED பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை...